FLASH NEWS



ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 12 லட்சம் விண்ணப்பங்கள் தயார்: அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளிலும் 17–ந்தேதி முதல் கிடைக்கும் .

Tuesday, March 29, 2011

Graduates Assistant balance Post will be release after election


பட்டதாரி ஆசிரியர்களின் மீதமுள்ள பணியிடங்கள் நிரப்புவது குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.சென்ற வாரம் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரை சந்தித்த போது தேர்தல் முடிந்த வுடன் அனைத்து ஆசிரியர் காலி பணியிடங்களையும். நிரப்புவதாக உறுதி அளித்துள்ளார்.

Thanks Mr.MurugaDass, Mr. Raman.Mr. Parandhaman


Monday, March 14, 2011

பள்ளிகள் தரம் உயர்த்துவதில் தாமதத்தால் கட்டமைப்பு வசதிகள் செய்வதில் சிக்கல்

விருதுநகர்:தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் (ஆர்.எம்.எஸ்.ஏ) திட்டத்தின் கீழ் 344 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தியது தாமதத்தால் கட்டமைப்பு வசதிகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மத்திய அரசின் அனைவருக்கும் இடை நிலைக்கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2014 ம் ஆண்டுக்குள் 14 வயது நிரம்பிய அனைவருக்கும் இடைநிலைக்கல்வி வழங்க வேண்டும். 2020 ல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் மேல் நிலைக்கல்வி வழங்க வேண்டும் என்ற குறிக் கோளுடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2010-11 ம் கல்வியாண்டில் முன் கூட்டியே நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது தான் தமிழகத்தில் 344 நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியிலும் 7 பட்டதாரி ஆசிரியர்களும், ஒரு உடற்கல்வி ஆசிரியர் உட்பட 2,752 ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். 344 பள்ளி ஆய்வகங்களுக்கு அலுவலக பணியாளர்களில் பதவி உயர்வு மூலம் நியமிக்கவும், 344 இள நிலை உதவியாளர்கள் டி.என்.பி. எஸ்.சி., மூலம் தேர்வு செய்து நியமிக்கப்படவுள்ளனர். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உயர்நிலை பள்ளிக்கு மூன்று ஏக்கர் நிலம் கட்டாயமாக இருக்க வேண்டும். கட்டடம், ஆய்வக வசதி, சேர், டேபிள் உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட வேண்டும். மத்திய அரசின் நிதி பரிந்துரைக்கு பின்னர் தான் பணி நியமனம், கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும். தமிழகத்தில் தேர்தல் அறிவித்துள்ள நிலையில் தேர்தல் முடிந்த பின்னர் தான் இந்த பணிகள் துவங்கும் என்பதால் ஜூன் மாதத்தில் தான் செய்யமுடியும். கால தாமதம் காரணமாக 2011-12 ம் கல்வியாண்டில் கூட பள்ளிகளில் ஒன்பதாம், பத்தாம் வகுப்பு மாணவர்களை சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனி வரும் ஆண்டுகளிலாவது பள்ளிகள் கல்வியாண்டின் துவக்கத்தில் தரம் உயர்த்தப்பட்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன் வர வேண்டும்.

Tuesday, March 8, 2011

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அலுவலர், உதவியாளர் நியமனம்


மதுரை : தமிழகத்தில் 344 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்ந்துள்ளன.

பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் மாநில தலைவர் இளங்கோவன், ஒருங்கிணைப்பாளர் பீட்டர் ராஜா, மதுரை கவுரவ தலைவர் பாஸ்கரன், செயலர் கிறிஸ்டோபர் ஜெயசீலன் விடுத்துள்ள அறிக்கை:
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, தரம் உயர்ந்த பள்ளிகளுக்கு எழுத்தர், ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் தரப்படவில்லை. வரும் ஆண்டில் சமச்சீர் கல்வி அறிமுகமாகும் நிலையில், எழுத்தர் பணியுடன், ஆய்வுக் கூட உதவியாளர் பணியிடங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக அரசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு நன்றி,' என்றனர்.

Saturday, March 5, 2011

ஆசிரியர் தேர்வு வாரியம்: பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பட்டியல் சான்றிதழ்களை சரிபார்த்து விரைவில் வெளியிட ஏற்பாடு


சென்னை, மார்ச்.5-

பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பட்டியல் சரிபார்க்கப்பட்டு விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்து வருகிறது.

பட்டதாரி ஆசிரியர் நியமனம்

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில்தான் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டுக்கான 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் பிப்ரவரி 28-ந்தேதி வெளியிட்டது. பள்ளிக்கல்வித்துறைக்கு அதாவது உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள 6-வது முதல் 10-வது வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் 2,489 பேர். இந்த பட்டியலில் 147 பேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுபோல தொடக்க கல்விக்கு 2,171 பேர் பட்டியல் வெளியிடப்பட்டது. இது நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 6-வது வகுப்பு முதல் 8-வது வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள். இந்த பட்டியலில் 109 பேர் பெயர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நிறுத்தி வைக்கப்பட்ட பட்டியலில் அனைத்து பிரிவினரும் உள்ளனர். அதாவது அருந்ததியினர், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், முற்பட்டபிரிவை சேர்ந்தவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் உள்ளனர்.

விரைவில் பட்டியல் வெளியீடு

நிறுத்தி வைக்கப்பட்ட 256 பேர்களுக்கும் எதனால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பதை விளக்கி சான்றிதழ் உள்ளிட்ட உரிய ஆவனங்களை பெற்று பட்டியல் வெளியிடப்பட உள்ளது. மேலும் அருந்ததியின பட்டியலில் உள்ளவர்களில் ஒரு பதவிக்கு 5 பேர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.

சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்பட்டதால் அழைக்கப்பட்ட அனைவருக்கும் வேலை உண்டு என நம்பி சிலர் வந்துள்ளனர் என்றும் தகுதியானவர்கள் யாராக இருந்தாலும் பட்டியலில் இடம்பெறுவார்கள். விரைவில் நிறுத்தி வைக்கப்பட்டவர் பட்டியலை சரிபார்த்து உரிய பட்டியல் வெளியிட ஏற்பாடு நடக்கிறது என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Friday, March 4, 2011

2,408 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு


சென்னை : தமிழகத்தில், 344 அரசு நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு 2,408 ஆசிரியர் பணியிடங்களை அனுமதித்தும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா வெளியிட்ட அரசாணை: அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், 344 அரசு நடுநிலைப் பள்ளிகள், 2011 - 12ம் கல்வியாண்டில் (வரும் கல்வியாண்டு) உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். தரம் உயர்த்தப்படும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு, தலா ஆறு பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 2,064 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 344 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களும் ஏற்படுத்தப்படும். 344 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக நிலை உயர்த்தப்படும். இவ்வாறு சபீதா கூறியுள்ளார்.

Wednesday, March 2, 2011

தேர்தல் நன்னடத்தை விதிகளில் முக்கியமானவை வருமாறு:-


* முடியும் தருவாயில் உள்ள திட்டங்களை நிறுத்தவோ தாமதப்படுத்தவோ தேவையில்லை. ஆனால் இதை அதிகாரிகள்தான் துவக்கி வைக்க வேண்டும். அரசியல் கட்சியினரை கொண்டு நடத்த கூடாது.
 
* செயல்பாட்டில் இருந்தாலும் நலத்திட்டங்களை அமைச்சர்கள் ஆய்வு செய்தல் கூடாது.
 
* பணி ஆணை வழங்கப்பட்டிருந்தாலும், பணி துவங்கப்படாத நிலையில் எந்த பணியையும் துவக்கக் கூடாது.
 
* பல்வேறு வகையான புதிய பணிகளை நிபந்தனை களுக்கு உட்பட்டு தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரி வித்து விட்டு மேற்கொள்ளலாம்.
 
* அரசு தரப்பில் எந்தவித புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏதும், தேர்தல் கமிஷனின் முன் அனுமதி பெறாமல் மேற்கொள்ளக் கூடாது.
 
* அரசு மற்றும் பொதுத் துறைகளில் எந்தவித நியமனங்களோ, பதவி உயர்வோ வழங்க கூடாது.
 

Dont Beleive Dinamalar News ! 100% ?

Dinamalar Giving news 50% only true 50% falls

புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்கள் மே 13ம் தேதிக்கு பிறகே பணி நியமனம்


சென்னை : "புதிதாக தேர்வு செய்யப்பட்ட 6,000 பட்டதாரி ஆசிரியர்களும், சட்டசபை தேர்தல் முடிந்த பிறகே பணி நியமனம் செய்யப்படுவர்' என, கல்வித்துறை வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன. பதிவுமூப்பு அடிப்படையில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்திற்காக 1,200 பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்க கல்வித் துறைக்கு 1,155 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறைக்கு 3,665 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 175 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் என, மொத்தம் 6,195 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பட்டியலை, நேற்று முன்தினம் இரவு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி, நேற்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால், தேர்வான ஆசிரியர்களுக்கு பணி நியமன கவுன்சிலிங் நடத்தாமல், காலியாக உள்ள இடங்களுக்கு நேற்றே பணி நியமனம் செய்து, தபால் மூலம் உத்தரவுகள் அனுப்பப்படுவதாக, தகவல்கள் பரவின. தேர்வானவர்கள், பணி நியமனம் குறித்து, அந்தந்த துறைகளில் கேட்டபடி இருந்தனர். அனைவருக்கும் நேற்றே பணி நியமன உத்தரவுகள் வழங்குவதற்கு, அதிகாரிகள் முயற்சித்தனர். இது தொடர்பாக, அதிகாரிகளுடன் துறை அமைச்சரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. எனினும், நேற்று மாலை, ஏப்ரல் 13ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கினால், அது தேர்தல் கமிஷன் விதிமுறைகளை மீறியதாக ஆகிவிடும் என்பதால், தேர்தலுக்குப் பின் பணி நியமன உத்தரவுகள் வழங்க முடிவெடுத்திருப்பதாக, துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, 6,195 பேருக்கும் மே 13க்குப் பிறகே பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படும். 
தேர்வுகளுக்கு பாதிப்பில்லை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி பொதுத்தேர்வுகள், இன்று துவங்குகின்றன. பிளஸ் 2 தேர்வுகள் இன்று முதல் 25ம் தேதி வரை நடக்கின்றன. மெட்ரிக்., மற்றும் ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள், இம்மாதம் 22ம் தேதி துவங்கி, ஏப்ரல் 11 வரை நடக்கின்றன. அதே போல், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் ஓ.எஸ்.எல்.சி., தேர்வுகள், இம்மாதம் 28ம் தேதி துவங்கி, ஏப்ரல் 11 வரை நடக்கின்றன. அனைத்து தேர்வுகளும், ஏப்ரல் 11ம் தேதியுடன் முடிந்துவிடுகின்றன. தேர்தல் காரணமாக, பொதுத்தேர்வுகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

Tuesday, March 1, 2011

தேர்வாகாத நண்பர்களே கலங்காதீர்கள்...............................



தேர்வாகாத நண்பர்களே  கலங்காதீர்கள்  TGF
உங்களுக்காக  போராட என்றும் இருக்கும் . எத்தனையோ பேர்கள் கண்ணீர் விட்டீர்கள்....உங்கள் மன நிலைபோல் யாருக்கும் வரகூடாது...கடவுள் உங்களுக்கு மனதைரியம் கொடுக்க வேண்டும்...வேளை கொடுக்காத கடவுள் எங்கே இருக்கிறார்? என்று கேட்கிறது உங்கள் மனம்...மேலும் மேலும்  கேட்டுக்கொள்கிறேன் கலங்காதீர்கள்...ஒற்றுமையா  இருப்போம் சாதிப்போம்....
என்றென்றும் உங்களுக்காக...

By Parandhaman
TGF

Board is now releasing the Graduate Assistants provisional selection list for 3665 candidates for the Director of School Education Department


After the completion of certificate verification, the Board is now releasing the Graduate Assistants provisional selection list for 3665 candidates for the Director of School Education Department. The said selection list was prepared and released only from the sponsored lists received from the Employment Exchange in the ratio of 1:5.  The said selections was purely carried on the basis of State-wide Employment Registration Seniority, communal rotation and certain priorities laid down by Government of Tamil Nadu.  The formal selection intimation will be sent to them individually by post.  Further notification / communication will be issued by the concerned Departments regarding counselling and placement. The results for remaining departments will be released shortly.

Subject

D.S.E.

Selected

Withheld

Not available
Reserved
Utilised
Cancelled

Total

Tamil

204 
9
126+6+0+1=133

346

English

336

39

3+7+0+0=10

385

Maths

644

27

9+0+4+0=13

684

Physics

436
18
2+0+0+1=3

457

Chemistry

429

27

-

456

Botany

182
11
1+2+0+1=4

197

Zoology

187

9

0+0+1+0=1

197

History

57

7

0+0+1+0=1

65

Geography

14

-

3

17

Total


147

168

2804




Subject

D.E.E.

Selected

Withheld

Not available
Reserved
Utilised

Total

English

250

7

57+5+1=63

320

Maths

395

28

52+0+0=52

475

Physics

114
4
8+0+0=8

126

Chemistry

99

25

2+0+0=2

126

Botany

51
2
1+0+0=1

54

Zoology

48

6

54

History





Geography



-



Total


72

126

1155

Sign In